"மதத்தைக் கடந்த தமிழ்ப்பற்று "
"கண்ணியமிகு காயிதே மில்லத்" அவர்கள் இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகச் செயல்பட்ட போது, எந்த மொழி தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற வாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள், "ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்பக் காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்த தொல்லியல் ஆராய்ச்சியாளராலும் இதை மறுக்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டும் என்றால், இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் " என்றார் .
நீங்கள் இசுலாமிர் ஆயிற்றே ! ஏன் தமிழை ஆட்சி மொழியாக்கக் கேட்கிறீர்கள்? என்று அவர்முன் கேள்வி எழுப்பப்பட்டது.
"
நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே ,
அம்மா
என்று அழைத்தவன்.
இசுலாம்
எனது வழியாகும். இன்பத் தமிழே எனது மொழியாகும் " என்று மதவுணர்வை மறந்து
தமிழுணர்வோடு பேசினார் காயிதே மில்லத்.
சாதியையும்
மதத்தையும் மறந்து என்று நாம் தமிழர் என்ற
உணர்வால் இணைகிறோமோ அன்று நம் தமிழ்மொழி
உலகை ஆளும் !
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 25 - "மதத்தைக் கடந்த தமிழ்ப்பற்று " ஆ.தி.பகலன் "
Post a Comment