தமிழ் அறிவோம்! "28 ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் " ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! "28 ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் " ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! "28  ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் "   ஆ.தி.பகலன்

 


"ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் "

 

'ஆடிக்காற்றில்  அம்மியும் நகரும் ' என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதற்கான உண்மையான பொருள் என்ன தெரியுமா?

 

ஆடிக்காற்றில் அம்மி நகருமா?

ஆடி மாதத்தில் அதிவேகமாகக் காற்றடித்தாலும் அம்மி இம்மியளவு கூட நகராது.

ஆடி மாதத்திற்கு முன்னுள்ள மாதங்கள் வேனில் (வெயில் வீசும்)  காலமாகும்.

இளவேனில் ( சித்திரை ,  வைகாசி)  

முதுவேனில்  (ஆனி, ஆடி)

ஆடி மாதத்தில்தான் வெயில் படிப்படியாகக் குறையும். சித்திரை மாதத்தின்  'கத்திரி'யில் தொடங்கிய  வெயிலின் தொடர் தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் உண்டாகும்.

ஆடியில் வரும் காற்றும் சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டைத் தணிக்கும்.

அதனால் அம்மை கண்டவர்கள் குளுமை அடைந்த, குணம் பெறுவார்கள்.  ஆடிக்குப்பின் அம்மை நோய் போய்விடும்.

அதனால் தான்  " ஆடிக்காற்றில் அம்மையும் நகரும் " என்றார்கள்.

காலப்போக்கில் இப்பழமொழி மருவி "ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் " என்றானது. 

இனியாவது இப்பழமொழியை சரியாகப்  பயன்படுத்துவோம்.

 

"ஆடிக்காற்றில் அம்மையும் நகரும் "

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to "தமிழ் அறிவோம்! "28 ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் " ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel