தமிழ் அறிவோம்! - 29. "களை எடுத்தலும் கயவரை அழித்தலும் ஒன்றே " ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 29. "களை எடுத்தலும் கயவரை அழித்தலும் ஒன்றே " ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்!  - 29. "களை எடுத்தலும் கயவரை அழித்தலும் ஒன்றே "   ஆ.தி.பகலன்

 


"களை எடுத்தலும் கயவரை அழித்தலும் ஒன்றே "

 

'தண்டனை அதிகமானால் தான்  குற்றங்கள் குறையும்' என்பார்கள். இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார் வான்புகழ் கொண்ட வள்ளுவர்.

சமூகத்தை சீரழிக்கும் கயவர்களுக்கு எதிராக தன் குறள்வழி குரல் கொடுத்து இருக்கிறார்.

 

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர். 

(குறள் - 550)

 

கயவர்களுக்கு கடுந்தண்டனை கொடுத்து நல்லவர்களை அரசன் காப்பது , உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமமாகும்.

வயலில் நல்ல பயிர் வாழ வேண்டும் என்றால் களையைப் பிடுங்கி எறிய வேண்டும்.

வையகத்தில் நல்ல மனிதர்கள் வாழவேண்டும் என்றால் கருணை காட்டாமல் கயவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் .

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to " தமிழ் அறிவோம்! - 29. "களை எடுத்தலும் கயவரை அழித்தலும் ஒன்றே " ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel