"சங்ககாலக் காதல் "
"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! '
(குறுந்தொகை - 40)
என் தாயும் உன் தாயும் யார் யாரோ எனக்குத் தெரியாது.
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்
என்பதும் எனக்குத் தெரியாது.
எந்த உறவு முறையை வைத்து நாம் இருவரும் அறிந்து கொண்டோம்
என்பதும் எனக்குத் தெரியாது.
ஆனால் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாமல் இருந்தாலும்
, செம்மண் நிலத்தில் பெய்த மழைநீரானது தன் தன்மையை இழந்து செம்மண்ணோடு செம்மண்ணாக
இரண்டறக் கலந்து பிரிக்க முடியாதத் தன்மையைப் பெற்றுவிடுவது போல ஒருவர் மீது
ஒருவர் அன்பு கொண்ட நம் இரு நெஞ்சங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்துவிட்டன .
இனி நம்மை ஒருவராலும் பிரித்தல் இயலாது " என
உண்மை நிலையை எடுத்துக் கூறி நான் உன்னைப் பிரியேன் என்று தலைவிக்கு
உறுதியளிக்கிறான் தலைவன்.
உறவினால் வருவதல்ல காதல்;
அன்பினால் உருவாகி இறுகப் பிணிக்கப் படுவதே காதல் ;
பிணிக்கப்பட்ட காதலுக்கு பிரிவு என்பது என்றுமே இல்லை.
'உண்மைக்காதல்'
உயிர் உள்ளவரை மட்டுமல்ல ,
உலகம் உள்ளவரை இருக்கும்
தமிழ் போல!
"சமகாலக் காதல் "
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றைப் பெற முடியும் என்கிறார்கள்.
அன்பே!
நான் உன்னை இழந்துவிட்டேன்
உன் தங்கையாவது கிடைப்பாளா?
சைக்கிளில் சென்றேன்
"ஹாய் " என்றாள்.
ஸ்கூட்டரில் சென்றேன் அத்தான் என்றாள்.
காரில் சென்றேன் மாமா என்றாள்.
அத்தனையும் 'ஓசி ' என்றேன்
'ச்சீ' போடா என்றாள்.
(சிரிக்க மட்டும் 😃)
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 30 - "சங்ககாலக் காதல் " ஆ.தி.பகலன்"
Post a Comment