"மரூஉ "
'மரூஉ ' என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துகளோ, ஒலியோ சிதைவுற்று வருவது ஆகும் .
சோழ நாடு - சோணாடு
உறையூர் - உறந்தை
குறிஞ்சி - குறிச்சி
மருதை - மதுரை
கோவன்புத்தூர் - கோயம்புத்தூர் - கோவை
உதகமண்டலம் - உதகை
மயிலாப்பூர் - மயிலை
தஞ்சாவூர் - தஞ்சை
கும்பகோணம் - குடந்தை
புதுச்சேரி - புதுவை
புதுக்கோட்டை - புதுகை
செங்கல்பட்டு - செங்கை
சிங்கப்பூர் - சிங்கை
திருநெல்வேலி - நெல்லை
நாகப்பட்டினம் - நாகை
திருச்சிராப்பள்ளி - திருச்சி
சைதாப்பேட்டை - சைதை
மயிலாடுதுறை - மாயவரம்
ஆர்க்காடு - ஆற்காடு
திருத்தணிகை - திருத்தணி
ஊற்றங்கரை - ஊத்தங்கரை
பண்ணுருட்டி - பண்ருட்டி
அரியூர் - அரூர்
மாவண்டூர் - மாமண்டூர்
கயல்பாக்கம் - கல்பாக்கம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 31 - "மரூஉ" ஆ.தி.பகலன்"
Post a Comment