அலைபேசி / அலைப்பேசி
கைபேசி / கைப்பேசி
தொலைபேசி / தொலைப்பேசி
எது சரி?
அலைபேசி - தவறு
அலைபேசி - உம்மைத்தொகை (அலையும் பேசியும்)
அலைபேசி - வினைத்தொகை
அலைந்த பேசி
அலைகின்ற பேசி
அலையும் பேசி.
என்று தவறான பொருள் உருவாகும்.
அலைப்பேசி - சரி
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
அலையால் இயங்கும்
பேசி.
காற்றலையால் - காந்த அலையால் - மின் அலையால் பேசப் பயன்படும் கருவி . ஆதலால் இது அலைப்பேசி ஆயிற்று.
கைபேசி - தவறு
கைபேசி - உம்மைத்தொகை ( கையும் பேசியும்)
கைபேசி - மூன்றாம் வேற்றுமை ( கையால் பேசுவது) என்று தவறான பொருள் உருவாகும்.
கைப்பேசி - சரி
கையின்கண் வைத்திருக்கும் பேசி (ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை) ஆதலால் இது கைப்பேசி ஆயிற்று.
தொலைபேசி - தவறு
தொலைபேசி - வினைத்தொகை
தொலைந்த பேசி
தொலைகின்ற பேசி
தொலையும் பேசி என்று தவறான பொருள் உருவாகும்.
தொலைப்பேசி - சரி
தொலைப்பேசி ( ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை - தொலைவி(இ)ன்கண் இருந்து பேசும் பேசி - தொலைதூரத்தில் உள்ள ஒருவர் நம்மிடம்
பேசவோ அல்லது தொலைதூரத்தில் உள்ள ஒருவரிடம் நாம் பேசவோ பயன்படும் கருவி)
ஆதலால் இது தொலைப்பேசி ஆயிற்று.
இனியாவது அலைப்பேசி, கைப்பேசி, தொலைப்பேசி என்று
தவறின்றிப் பேசுவோம். தவறின்றி எழுதுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 33 அலைபேசி / அலைப்பேசி கைபேசி / கைப்பேசி தொலைபேசி / தொலைப்பேசி எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment