" நாய்பெற்ற தெங்கம் பழம் "
ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது.
1. தானம் கொடுத்தல்
2. தன் தேவைகளுக்கு பயன்படுத்துதல்
3. எதற்கும் பயன்படுத்தாமல் வைத்திருந்து எவரிடமாவது
மொத்தமாக ஏமாந்து போதல்.
இதில் முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கும். தனக்கு கிடைத்த அளவற்ற செல்வத்தை தானும் அனுபவிக்காமலும் மற்றவர் நலனுக்கு கொடை கொடுக்காமலும் வைத்திருக்கும் செல்வம் நாசமாகும்.
" வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.
( பழமொழி நானூறு - 151)
முழங்குகின்ற அருவியில் இருந்து நீர் கொட்டுவதால் மூங்கில் முதிர்ந்து முத்துகள் உதிரும் மலைநாட்டு வேந்தனே!
பிறர்க்கு ஈதலும், தான் அனுபவித்தலும் அறியாதவன் கொண்டிருக்கின்ற முழங்குகின்ற முரசினை உடைய பெருஞ்செல்வம் நாய்பெற்ற தேங்காயைப் போன்றது ஆகும்.
நாய் ஒரு தேங்காயைப் பெற்றால் தான் உடைத்துத் தின்னவும்
அறியாது. பிறர்க்குக் கொடுக்கவும் மனமின்றி உருட்டிக் கொண்டு அலையும்.
அதுபோலவே சமூகத்தில் சிலர் கோடிக்கணக்கில் பணம்
வைத்திருந்தாலும் கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 34 " நாய்பெற்ற தெங்கம் பழம் ஆ.தி.பகலன்"
Post a Comment