தமிழ் அறிவோம்! - 36 "ஆவன செய்யுமாறு " ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 36 "ஆவன செய்யுமாறு " ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  - 36 "ஆவன செய்யுமாறு "  ஆ.தி.பகலன்

 


"ஆவன செய்யுமாறு " 

நாம் ஏதேனும் உதவி வேண்டி வேண்டுதல் விண்ணப்பம் எழுதுவோம் . விண்ணப்பத்தின் இறுதியில் 'ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் ' என்று முடிப்போம் .

அது என்ன ஆவன செய்யுமாறு?

சிலர் அதன் பொருள் அறியாமல் ஆவண  செய்யுமாறு என்றும் எழுதுகின்றனர் . இதில் உள்ள பிழைகளைக் கண்டறிவோம் .

ஆவணம் ( DOCUMENT)

நம் எண்ணங்களை எழுதியோ , வரைந்தோ காட்சிப்படுத்தும். நிலையான (கோப்பு)  பதிவையே  ஆவணம் என்பர் . காலம் காலமாக ஆவணங்கள் நூல் வடிவில் (தாளில் ) வெளிவந்தன . இப்போது கணினிக் கோப்புகளாக உருவாக்குகிறார்கள். இதனை எண்ணிம ஆவணம் ( ELECTRONIC  DOCUMENT)  அல்லது மின்னியல் ஆவணம் என்று அழைப்பர். எனவே விண்ணப்பத்தில் ஆவண செய்யுமாறு என்று எழுதுதல் கூடாது.

"ஆவன செய்யுமாறு "

இதற்கு ' ஆக வேண்டியன ' என்று பொருளாகும்.

எங்கள் ஊருக்கு குடிநீர் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் ஊருக்கு குடிநீர் வழங்க ஆக வேண்டியன (ஆவன) செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இனியாவது, பொருள் அறிந்து "ஆவன செய்யுமாறு " என்று பிழையில்லாமல் எழுதுவோம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! - 36 "ஆவன செய்யுமாறு " ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel