ஐ.நா. அவையின் முகப்பில் பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்பட்ட
" யாதும் ஊரே யாவரும் கேளிர் "
24.10.1945 அன்று ஐக்கிய நாடுகள் அவை ( UNO)
தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் ( USA) உள்ள நியுயார்க் நகரில் ஐ.நா.அவை செயல்பட்டு
வருகிறது.
பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், மனித
உரிமைகளைப் பாதுகாத்தல், மனித நேய உதவிகளை வழங்குதல், உலகில் நிலையான வளர்ச்சியை
ஊக்குவித்தல், பன்னாட்டு சட்டத்தை நிலைநிறுத்தல் ஆகியவை ஐ.நா. அவையின்
நோக்கமாகும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் " உலக நாடுகளுக்கு நாட்டாமை " என்றே
சொல்ல வேண்டும்.
ஐ.நா. அவை
தொடங்கப்படுவதற்கு முன்பு நடந்த ஆலோசனைக்
கூட்டத்தில் "ஐ.நா. அவை"யின் நோக்கத்தை வெளிப்படுத்தும் பொன்மொழி
(வாசகம்) ஒன்றை தேர்ந்தெடுத்து அதை
ஐ.நா.அவையின் முகப்பில் பொறிக்க வேண்டும்
என்று முடிவு செய்யப்பட்டது .
அதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, இலத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட உலகின் தலை சிறந்த மொழிகளில் உள்ள பொன்மொழிகளை ஆய்வு செய்தனர் . எதுவுமே அவர்களது மனதைக் கவரவில்லை . பொருத்தமாகவும் இல்லை .
உலகின் முதன்மொழியான தமிழ்மொழியில் இருந்து
பொன்மொழிகளைத் தேடும்பணியைத் தொடங்கினர். ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில்
மொழிப்பெயர்த்த "புறநானூறு " என்னும் நூலை வாசிக்கும் வாய்ப்பு
அவர்களுக்கு கிட்டியது. அதில் கணியன்
பூங்குன்றனார் எழுதி இருந்த " யாதும்
ஊரே யாவரும் கேளிர் " என்னும் கவிதையைக் கண்டவுடன் அவர்களின் கண்கள்
வியப்பில் விரிந்தது.
இதைவிட சிறந்த பொன்மொழி உலகில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, இதையே "ஐ.நா.அவையின் நோக்க வாசகம்" என அறிவித்தனர்.
ஐ.நா.அவையின் முகப்பில்
"யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும்
வாசகத்தைப் பொன்னெழுத்துகளால் ( Golden
words என்ற சொலவடை உருவாக இதுவே காரணமாக இருந்தது என்பர்)
பொறித்தனர். அதன்கீழ் ஆங்கிலத்தில் விளக்கத்தையும் எழுதி உள்ளனர்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "
(புறநானூறு - 192)
பொருள் :
எல்லா ஊரும் எம்
ஊரே!
எல்லா மக்களும் எம் உறவினரே!
( To us all towns are one, all men out kin)
'கேளிர்' என்றால் உறவினர் என்று பொருள்.
தமிழின் பெருமையை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த "
யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும் பொன்மொழியை உயிர் உள்ளவரை போற்றிக்
காப்போம். உணர்வு உள்ளவரை அதன்படி
வாழ்ந்து காட்டுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 38 " யாதும் ஊரே யாவரும் கேளிர் " ஆ.தி.பகலன் "
Post a Comment