தமிழ் அறிவோம்! - 39 ஆசிரியர் - மாணவர் ஆசு + இரியர் = ஆசிரியர் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 39 ஆசிரியர் - மாணவர் ஆசு + இரியர் = ஆசிரியர் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! - 39  ஆசிரியர் - மாணவர்  ஆசு + இரியர் = ஆசிரியர்  ஆ.தி.பகலன்

 


ஆசிரியர் - மாணவர்

ஆசு + இரியர் = ஆசிரியர் .

ஆசு - குற்றம்

இரியர் - நீக்குபவர்.

மாணவர்களிடையே உள்ள 'அறியாமை' யாகிய குற்றத்தை நீக்குபவரே "ஆசிரியர் "  மாணவர்களிடையே உள்ள அறியாமையைக் களைந்து அவனை அறிவுள்ளவனாய் மாற்றுபவரே " ஆசிரியர் "

மாண் + அவர் = மாணவர்

மாண்  என்ற சொல்லானது மாண்பு, மாட்சிமை,  பெருமை, சிறப்பு என்ற பொருளில் வருகிறது.

பெருமிதம் எனும் மெய்ப்பாடு தோன்றும் களன்களைத் தொல்காப்பியம் வரையறை செய்துள்ள முறையைக் காண்போம்.

" கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே "

(தொல். மெய் - 9 )

கல்வி - கற்பதால் பெருமிதம் தோன்றும்.

தறுகண் - வீரத்தால் பெரும் வெற்றி பெருமிதத்தைக் கொடுக்கும்.

புகழ்மை - நற்செயல் செய்து அதனால் கிடைக்கும் புகழ் நமக்கு பெருமிதத்தைக் கொடுக்கும்.

கொடை - வறியோர்க்கு அளிக்கும் கொடையால் நமக்கு பெருமிதம் உண்டாகும்.  இந்த நான்கு வகையால் பெருமிதம் தோன்றும்.

இதில் முதலில் கூறப்பட்டது கல்வி. கல்வி கற்கும் எல்லோர்க்கும் பெருமிதம் (பெருமை)  உண்டாகும்.

அந்த வகையில் 'மாண் ' என்ற சொல்லானது 'பெருமிதம்'  (பெருமை)  என்ற பொருளில் வருவதை அறியலாம்.

 "மாணவன் "  என்றால் பெருமைக்கு உரியவன் என்று பொருளாகும்.

கல்வியைக் கசடறக் கற்பதனாலேயே அந்த பெருமை அவனைச் சேரும். கல்வி கற்பவன் பெருமையோடு விளங்குவான் என்பதை எடுத்துக்காட்டவே அவனை "மாணவன்" என்று அழைக்கிறோம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! - 39 ஆசிரியர் - மாணவர் ஆசு + இரியர் = ஆசிரியர் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel