வாழ்த்துகள் /
வாழ்த்துக்கள்
எது சரி?
பெயர்ச்சொல்லோடு 'கள்' என்னும் பன்மை விகுதி சேரும் போது ஒற்று
(க்) மிகாது.
வாழ்த்துகள்
எழுத்துகள்
செய்திகள்
பாட்டுகள்
மெட்டுகள்
"கள் " என்னும் பன்மை விகுதி சேரும் போது ஒற்று (க்)
சேர்ந்தால் பொருள் மயக்கம் உண்டாகும் .
தோப்புகள் - எண்ணற்ற தோப்பு இருந்தால் அதை தோப்புகள் என்பர்.
தோப்புக்கள்
இப்படி ஒற்று சேர்த்து சொன்னால்
தோப்பில் இருந்து இறக்கப்பட்ட கள் (தென்னங்கள் - பனங்கள்) என்ற தவறான பொருள்
உண்டாகும்.
வாழ்த்துக்கள் என்று எழுதினால் வாழ்த்தையே கள்ளாக (மது) குடித்தல்
என்று தவறாக பொருள்படும்.
எனவே "வாழ்த்துகள் " என்பதே சரி!
"கள்" என்னும் பன்மை விகுதி சேரும் போது எங்கெல்லாம்
ஒற்று மிகும்?
ஓரெழுத்து சொற்கள் (பூ,ஈ,,பா) பன்மை விகுதி ஏற்கும் போது ஒற்று
மிகும்.
பூக்கள்
ஈக்கள்
பாக்கள் .
ஐகாரத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு "கள்" விகுதி
சேர்ந்தால் ஒற்று மிகாது.
பைகள்
கைகள்
விதைகள்
பிழைகள்
பண்டிகைகள்
காணிக்கைகள்
முற்றியலுகரச் சொற்கள் "கள்" என்னும் விகுதி ஏற்கும்
போது ஒற்று (க்) மிகும்.
பசுக்கள்
கொசுக்கள்
திசுக்கள்
குழுக்கள்
தெருக்கள்
புழுக்கள்
அணுக்கள்
வடுக்கள்.
நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு "கள்" விகுதி
சேர்ந்தால் ஒற்று (க்) மிகும்.
நிலாக்கள்
புறாக்கள்
விழாக்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! - 4 வாழ்த்துகள் / வாழ்த்துக்கள் எது சரி? - ஆ.தி.பகலன்"
Post a Comment