தமிழ் அறிவோம்! - 5 - ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி - எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 5 - ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி - எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! - 5 - ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி - எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே  ஆ.தி.பகலன்

 


ஓருமுறை கம்பர் ஔவையாரிடம் "ஒரு விடுகதை சொல்கிறேன். விடை சொல்லுங்கள்" எனக் கூறி ஒரு விடுகதையைக் கூறினார்.

 

"ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி "

 

பொருள் :: ஒருகால் கொண்டதடி

நான்கு இலைகளைப் பந்தல் போல கொண்டதடி.

அது என்ன? என்பதே கேள்வி.

கேள்வியின் இறுதியில் "டி" என்று முடிவதால், தன்னை "வாடி,போடி " என்ற முறையில் மரியாதைக் குறைவாக கம்பர் பேசிவிட்டதாக ஔவையார் நினைத்துக் கொண்டார்.

உடனே பொங்கி எழுந்த ஔவையார் விடுகதைக்கு விடை கூறுவது போல கம்பரைப் பார்த்து ஒரு பாடல் பாடினார்.

 

"எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அது. "

 

பொருள் ::

எட்டேகால் லட்சணமே - தமிழில் 8 என்பதன் குறியீடு "அவ" . கால் என்பதன் குறியீடு "வ" . இதன் பொருள் ",அவ லட்சணமே "

எமனேறும் பரியே - இங்கே பரி என்பது வாகனத்தைக் குறிக்கிறது. அதாவது  எமனின் வாகனம் "எருமை " . எனவே இது எருமையே என்கிறது.

மட்டில் பெரியம்மை வாகனமே - பெரியம்மை என்பது மூதேவியைக் குறிக்கும். மூதேவியின் வாகனம் " கழுதை " . எனவே இது கழுதையே என்கிறது.

முட்டமேல் கூரையில்லா வீடே - தலை முட்டுமாறு மேலே கூரை இல்லாத வீடு. அதாவது " குட்டிச்சுவரே "

குலராமன் தூதுவனே - இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அனுமன். அதாவது " குரங்கே "

ஆரையடா சொன்னாய் அது - நீ சொன்னது "ஆரைக்கீரையை "

 

தன்னை "டி " போட்டு சொன்னதற்காக

கம்பரைப் பார்த்து

அவலட்சணமே

எருமையே

கழுதையே

குட்டிச்சுவரே

குரங்கே

என்றெல்லாம் வன்தமிழில் வசை பாடிவிட்டு இறுதியில்  (ஆரையடா)  "டா" போட்டு ("போடா, வாடா " என்பது போல்) பாடலை முடித்திருக்கிறார் ஔவையார்.

வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வது என்பது எல்லாக் (கம்பர்) காலத்திலும் நடந்துள்ளது .

இனிமேல் யாரையாவது திட்டுவதாக இருந்தால்  ஔவையின் தமிழைக் கடன் வாங்கித் திட்டுங்கள்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)


0 Response to "தமிழ் அறிவோம்! - 5 - ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி - எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel