"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் "
தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதி நூல்களுல் ஒன்று
நறுந்தொகை ஆகும். இது வெற்றி வேற்கை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நூலின்
ஆசிரியர் அதிவீரராம பாண்டியன் ஆவார். இவர் கவியரசராகவும் (புலவர்) ,
புவியரசராகவும் (மன்னர்) விளங்கியவர்.
இளைஞர்கள் நல்ல நெறிகளை அறிய வேண்டி நல்ல சொற்றொடர்களால் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. எண்பத்து இரண்டு எளிமையான சொற்றொடர்களால் ஆனது இந்நூல். இந்நூலில் பல அருமையான அறக்கருத்துகள் உள்ளன .
அவற்றில் ஒன்றினை இன்று பார்ப்போம் .
" எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் "
எழுத்து - கல்வி
அறிவித்தவன் - கற்றுக்கொடுத்தவன்
இறைவன் - கடவுள்
ஆகும் - ஆவான்.
கல்வியைக் கற்றுக்கொடுப்பவனே உண்மையான கடவுள். அப்படியெனில் ஆசிரியர்களே இந்த உலகத்திற்கு உண்மையான கடவுள் என்று கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆசிரியர்களின் பெருமையைப் பறைசாற்றும் நறுந்தொகையைவிட சிறந்த நூல் உலகில் வேறு எதுவும் இல்லை. ஆசிரியர்களைக் கொண்டாட மறந்ததினால்தான் இன்று உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்த உலகத்தை உயர்த்த
பகலில் உழைப்பது
போதவில்லை என்று
இரவையும் இரவல் வாங்கி
உழைப்பவர்கள் ஆசிரியர்கள்!
அப்படிப்பட்ட ஆசிரியர்களை
எப்போதும் வைப்போம் உயரத்தில்!
இல்லையேல்
ஒட்டுமொத்த உலகமும் இருக்கும் துயரத்தில்!
ஒருவனுக்கு வாழ்க்கை கொடுப்பவர்தான்
கடவுள் என்றால் இங்கு
ஆசிரியர்கள்தான் உண்மையான கடவுள்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 41 "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் " ஆ.தி.பகலன்"
Post a Comment