இந்த புகழ்பெற்ற கவிதையைக் கேட்டாலே தமிழர்களின்
உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி உண்டாகும்.
இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?
பெரும்பான்மை தமிழர்கள் சொல்லுகின்ற பெயர்
"புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் "
ஏனென்றால் அவர்தான் அந்த வசனத்தை அதிக முறை அவர் நடித்த
படங்களிலே சொல்லி இருக்கிறார். என்வே மக்கள் மனதில் விஜயகாந்த் பெயர்
பதிந்துவிட்டது. ஆனால் அதை கூறியது விஜயகாந்த் இல்லை.
உண்மையிலேயே அதைக் கூறியது யார் தெரியுமா?
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன் -
அம்மணியம்மாள் இணையருக்கு 19.10.1888 அன்று மகனாகப் பிறந்தார்.
"காந்தியக்கவிஞர் " என்ற அடைமொழியோடு
அழைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் "முதல் அரசவைக் கவிஞர் "
என்னும் பெருமையைப் பெற்றவர். நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும் தம் இருகண்களாகக்
கொண்டவர்.
தமிழ்மீதும், தமிழர் மீதும் பற்றுகொண்டு பாடிய கவிதையே இது.
" தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா "
" தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு "
" அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும் "
"தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கீதம்" என்று சொல்லும் அளவுக்கு அவர் பாடல்கள்
உள்ளன.
தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தலைமீது வைத்துக் கொண்டாட
வேண்டிய கவிஞர் தான் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 43 - " தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " ஆ.தி.பகலன்"
Post a Comment