தமிழ் அறிவோம்! 44 - ஓர் / ஒரு பயன்படுத்த வேண்டிய இடங்கள் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 44 - ஓர் / ஒரு பயன்படுத்த வேண்டிய இடங்கள் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  44 - ஓர் / ஒரு பயன்படுத்த வேண்டிய இடங்கள்  ஆ.தி.பகலன்

 


ஓர் / ஒரு 
பயன்படுத்த வேண்டிய இடங்கள். 

ஒரு சொற்றொடரின் முதல் சொல்லை  ' நிலைமொழி ' என்பர்.

ஒரு சொற்றொடரின் இரண்டாவது சொல் (அதாவது நிலைமொழியை அடுத்து வரும் சொல்)லை  ' வருமொழி ' என்பர். 

ஒரு, ஓர் ஆகிய இரண்டு சொற்களுமே என்றும் நிலைமொழியாகத்தான் பயன்படுத்துகிறோம் .

ஓர் : 

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து எனில் 'ஓர்' எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 

ஓர் இலை

ஓர் அணில். 

ஒரு :

வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்து எனில் 'ஒரு' எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 

ஒரு சொல் கேளீர்

ஒரு புளியமரத்தின் கதை 

'ஓர் ' என்பது உயிரெழுத்து முன்னும் வரும் சில இடங்களில் மெய்யெழுத்து முன்னும் வரும். 

"நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் "

(சிலப்பதிகாரம்) 

"ஓர் யான் மன்ற துஞ்சா தேனே "

(குறுந்தொகை - 06) 

ஒரு, ஓர் இரண்டுமே அஃறிணைக்கு மட்டுமே வரும்.

உயர்திணைக்கு வராது. 

ஓர் ஆசிரியர்

ஓர் எழுத்தாளர்

என்று எழுதக்கூடாது.

ஆசிரியர் ஒருவர்

எழுத்தாளர் ஒருவர்

என்றுதான் எழுத வேண்டும். 

நாம் காலம் காலமாக சொல்லிவரும் புகழ்பெற்ற சொற்றொடர் இது 

" ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார் "

இது இலக்கணப் பிழையான சொற்றொடர்.  

பிழையற்ற சொற்றொடர் இதுதான். 

ஓர் ஊரில் ராஜா ஒருவர் இருந்தார்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 44 - ஓர் / ஒரு பயன்படுத்த வேண்டிய இடங்கள் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel