எங்கே போனது உலக நீதி?
ஆனால் இன்று எந்தப் பாடப்புத்தகத்திலும் இப்பாடல்
இடம்பெறவில்லை என்பது வேதனையான செய்தியாகும்.
பாடப்புத்தகத்தில் "உலக நீதி " இல்லை.
அதனால்தான் இன்றைய உலகத்தில் நீதி இல்லை.
உலக நீதியை மறந்தோம்!
உலகம் நீதியை மறந்தது!
உலக நீதி :
" ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்"
விளக்கம் :
1. எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்க வேண்டும்.
2. மற்றவர் மீது பழிச்சொல் சொல்லக் கூடாது.
3.பெற்ற தாயை என்றும் மறக்கக் கூடாது. எக்காலத்திலும்
தாயை நினைந்து போற்ற வேண்டும்.
4. வஞ்சகச் செயல்களை
செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது.
5. செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச்
செல்லாக்கூடாது. போகக் கூடாத (தகாத)
இடங்களுக்கு போகக் கூடாது.
6. ஒருவரைக் கண்ட போது புகழ்வதும், அவர் சென்றபின் அவரை
இகழ்வதும் கூடாது.
இப்படிப்பட்ட நல்ல கருத்துகளைக் கொண்ட " உலக நீதி
" பாடல்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
அடுத்த தலைமுறைக்கு நம் அறிவுச் செல்வத்தைக் கொண்டு
செல்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 45 - எங்கே போனது உலக நீதி? ஆ.தி.பகலன்"
Post a Comment