பட்டினம் / பட்டணம் வேறுபாடு!
பட்டினம் :
பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரங்களைக்
குறிக்கும்.
இது நெய்தல் நிலத்தில் உள்ள நகரத்தைக் குறிக்கும்
சொல்லாகவே நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்
காயல்பட்டினம்
காவிரிப்பூம்பட்டினம்.
பட்டணம்= பட்டு + அணம்.
பட்டு என்ற சொல்லுக்கு
நகரம் என்ற பொருளும் உண்டு.
செங்கல்பட்டு
சேத்துப்பட்டு.
அணம் என்ற
சொல்லின் வேர்ச்சொல் 'அண்' என்பதாகும்.
''அண்' என்பது அண்மை, அடுத்திருத்தல் ஆகிய பொருளில் வருகிறது.
'பட்டணம் ' என்றால் பட்டுகளுக்கு அண்மையாக இருப்பது
என்று பொருளாகும். அடுத்தடுத்து உள்ள நகரம், நெருக்கமாக உள்ள நகரம் என்றும் பொருள்
கொள்ளலாம்.
அதாவது, "பட்டணம்" என்ற சொல்லுக்கு
"பெருநகரம் " என்று பொருளாகும்.
பெருநகரங்களைக் குறிக்கவே பட்டணம் என்ற சொல்லைப்
பயன்படுத்த வேண்டும்.
பட்டிக்காடா
பட்டணமா
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! – 46 - பட்டினம் / பட்டணம் வேறுபாடு! ஆ.தி.பகலன்"
Post a Comment