தமிழ் அறிவோம்! 47 தமிழ், தமிழன், தமிழர், தமிழ்நாடு , தமிழகம், உள்ளிட்ட இச்சொற்கள் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியங்களைக் காண்போம். ஆ.தி.பகலன்



தமிழ், தமிழன், தமிழர், தமிழ்நாடு , தமிழகம், உள்ளிட்ட இச்சொற்கள் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியங்களைக் காண்போம்.
தமிழ் :
'தமிழ்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் -
தொல்காப்பியம்.
" தமிழ்என் கிளவியும் அதனோர் அற்றே "
(தொல்காப்பியம் - 386)
'தமிழ்மொழி' பேசப்பட்ட நிலத்தை வரையறை செய்துள்ளது
தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரம்.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து "
(தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் பனம்பாரனார் பாடியது)
தமிழன் :
'தமிழன்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் தேவாரம்.
"தமிழன் கண்டாய் "
(அப்பர் தேவாரம், திருத்தாண்டகம் - 23)
தமிழர் :
' தமிழர் ' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் -
சிலப்பதிகாரம்.
" அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட
கனக விசயரை "
(நீர்ப்படைக்காதை, வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்)
தமிழ்நாடு :
'தமிழ்நாடு' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல்
- சிலப்பதிகாரம்.
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய "
(வஞ்சிக்காண்டம் - 165.
சிலப்பதிகாரம்)
தமிழகம் :
'தமிழகம்' என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் -
புறநானூறு.
"வையக வரைப்பில் தமிழகம் கேட்ப "
(புறநானூறு - 168)
உலக வரலாற்றில் ஒரு மொழியின் பெயரும், அதைப் பேசிய இனத்தின் பெயரும், அது பேசப்பட்ட
இடத்தின் பெயரும் இடம்பெற்ற இலக்கியங்களை ஐயாயிரம்
ஆண்டுகளாக (உலகில் எழுத்து வடிவில்
முழுவதும் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம் . இதன் காலம் ஐயாயிரம்
ஆண்டுகள்) காப்பாற்றி வரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே. அதிக அளவில் இலக்கியங்களை
தன்பால் வைத்திருக்கும் ஒரே உலக மொழி தமிழ்மொழி மட்டுமே!
மேற்கண்ட சொற்களான தமிழ், தமிழன், தமிழர், தமிழ்நாடு,
தமிழகம் ஆகிய அனைத்தும் திருக்குறளில் இடம்பெறவில்லை.
அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
எந்த ஒரு மொழியையும், எந்த ஒரு இனத்தையும், எந்த ஒரு
நாட்டையும் குறிப்பிட்டோ, உயர்த்தியோ பேசாத ஒரே நூல் திருக்குறள் மட்டுமே!
"உலகப் பொதுமறை " என்ற உயர்ந்த தகுதி
என்றென்றும் திருக்குறளுக்கு மட்டுமே உரியது. உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிய
நூல் திருக்குறள்.
வள்ளுவத்தை மறந்தவர்
வாழும்போதே
இறந்தவர்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 47 தமிழ், தமிழன், தமிழர், தமிழ்நாடு , தமிழகம், உள்ளிட்ட இச்சொற்கள் முதன்முதலில் இடம்பெற்ற இலக்கியங்களைக் காண்போம். ஆ.தி.பகலன் "
Post a Comment