தமிழ் அறிவோம்! - 48 மலேசிய பள்ளிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உள்ள பாடத்திட்டத்தில் இடம்பிடித்த " திருக்குறள் "ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 48 மலேசிய பள்ளிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உள்ள பாடத்திட்டத்தில் இடம்பிடித்த " திருக்குறள் "ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  - 48  மலேசிய பள்ளிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உள்ள  பாடத்திட்டத்தில் இடம்பிடித்த " திருக்குறள் "ஆ.தி.பகலன்

 


மலேசிய பள்ளிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உள்ள  பாடத்திட்டத்தில் இடம்பிடித்த " திருக்குறள் "

தமிழுக்கும், தமிழர்களும் எப்போதும் உரிய மரியாதை வழங்கும் நாடு மலேசியா.

உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.

மாநாட்டிற்கும் முதல் மொழியாக தமிழே இருந்தது. 

இதுவரை நடந்த 11 உலகத் தமிழ் மாநாடுகளில், நான்கு (1966, 1987, 2015, 2023) மாநாடுகளை நடத்திய ஒரே நாடு மலேசியா தான். இந்த நான்கு உலகத் தமிழ் மாநாடுகளும் மலேசிய தலைநகரம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

இப்படி தமிழ்மொழியை உலக அரங்கில் உயர்ந்த இடத்தில் வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மலேசியா. 

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  சென்னை வந்த மலேசிய நாட்டின் கல்வித்துறை இணையமைச்சர் கமலநாதன் அவர்கள்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, 

"தமிழ் தொன்மையான மொழி . அந்த மொழிக்கு மலேசிய அரசு உரிய மரியாதையை வழங்கி வருகிறது.

வரும் கல்வியாண்டு( 2017) முதல் 254 அரசு பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டமாக அமைக்க உள்ளோம். ஆரம்பப் பள்ளிகள்  மட்டுமின்றி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களிலும் திருக்குறளை பாடத்திட்டமாக சேர்க்க உள்ளோம் என்று அறிவித்தார். 

அப்போது செய்தியாளர்கள்" திருக்குறள் மீது ஏன் உங்களுக்கு  இவ்வளவு பற்று " என்று கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர்,

" ஒருவன்  இந்து என்றால் அவன் " பகவத் கீதை" படித்திருக்க வேண்டும்.

ஒருவன் கிறித்தவன் என்றால் அவன் " பைபிள் " படித்திருக்க வேண்டும். 

ஒருவன் இஸ்லாமியன் என்றால் அவன் குரான் படித்திருக்க வேண்டும்.

ஒருவன் நல்ல மனிதன் என்றால் அவன் " திருக்குறள் " படித்திருக்க வேண்டும்.

இந்த உலகில் நல்ல சமுதாயத்தையும் , நல்ல மனிதர்களையும் உருவாக்க திருக்குறளால் மட்டுமே முடியும் . அதனால் தான் திருக்குறளை தனிப்பாடமாக வைக்க முடிவு செய்தோம் ' என்றார்.  

இந்த உலகம்

நாளை

உங்கள் குரல்வழி நடக்க வேண்டும் என்றால்

இன்று

நீங்கள் குறள்வழி நடக்க வேண்டும்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! - 48 மலேசிய பள்ளிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உள்ள பாடத்திட்டத்தில் இடம்பிடித்த " திருக்குறள் "ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel