தாய்மொழியில் கையெழுத்து ( SIGNATURE) இடுவோம்!
கையெழுத்து ( கையொப்பம்)
நம் தாய் தந்தை யாரென்பதை நம் தலைப்பெழுத்து ( INITIAL) காட்டும்.
நம் தாய்மொழி எதுவென்பதை நம் கையெழுத்து ( SIGNATURE) காட்டும்.
உலகில் உள்ள எல்லா மொழியினரும், எல்லா நாட்டினரும் தத்தம் தாய்மொழியில்தான் கையெழுத்து
இடுகின்றனர். ஒரே ஒரு மொழியினர் மட்டுமே ஆங்கிலத்தில் கையெழுத்து இடுவதை கௌரவமாக
நினைக்கின்றனர்.
அந்த அதிபுத்திசாலிகள் யாரென்று தெரியுமா?
தமிழர்கள் தான்.
"உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே "
(தொல்காப்பியம்)
"மக்களை உயர்திணை எனக் கூறுவர். மக்கள் அல்லாத ஏனைய உயிர்களை அஃறிணை எனக் கூறுவர்" என்கிறார் தொல்காப்பியர் .
என்னைப் பொறுத்தவரையில் தாய்மொழியில் கையெழுத்து இடுபவரை உயர்திணை என்றும், தாய்மொழியில் கையெழுத்து இடாதவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம்.
தாய்மொழி அறிவு இல்லாதவன் நல்ல சிந்தனையாளனாக இருக்க
முடியாது .
தாய்மொழிப் பற்று இல்லாதவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956 இல் இயற்றப்பட்டது
.
தமிழ் வளர்ச்சித்துறை 28.05.1971 இல் உருவாக்கப்பட்டது.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை செய்து வருகிறது.
அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அரசாணை எண். 1134. நாள் : 21.06.1978 இல் ஆணையிடப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் தாய்மொழியில் தான் கையெழுத்து இடவேண்டும் என்று சட்டம் இயற்றி அறிவுறுத்த வேண்டிய அவல நிலை நம் தமிழ் நாட்டில் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பது காலக்கொடுமை.
" கையெழுத்து நன்றாக இருந்தால்தான் தலையெழுத்து நன்றாக இருக்கும் " என்பது பழமொழி.
"கையெழுத்து தாய்மொழியில் இருந்தால்தான் தலையெழுத்து நன்றாக இருக்கும் " என்ற புதுமொழியை இனி உருவாக்குவோம்.
யார் தமிழர்கள்?
தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்லர்.
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்லர்.
தமிழில் கையெழுத்து இடுபவர்களே இனி உண்மையான தமிழர்கள்.
தமிழர்களே!
தமிழர்களே!!
நீங்கள் உயர்திணை என்பதையோ ,
நீங்கள் தமிழர்கள் என்பதையோ இந்த உலகிற்கு எளிமையாக
எடுத்துக்காட்ட விரும்பினால்
உங்கள் கையெழுத்தைத் தமிழில் இடுங்கள்!
தமிழா!
தமிழில் இல்லை
உன் கையெழுத்து!
பின் எப்படி மாறும்
தமிழின் தலையெழுத்து?
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 50 தாய்மொழியில் கையெழுத்து ( SIGNATURE) இடுவோம்! ஆ.தி.பகலன்"
Post a Comment