தலைப்பெழுத்து (
INITIAL)
முன்னெழுத்து :
நம் பெயருக்கு முன்பாக எழுதுகின்ற அம்மா, அப்பா, பிறந்த ஊர் ஆகியவற்றின் முதல் எழுத்தையே தலைப்பெழுத்து அல்லது முன்னெழுத்து என்பர். பெரும்பாலானவர்கள் தாங்கள் பிறந்த ஊரின் முதல் எழுத்தையும், தங்கள் தந்தையார் பெயரின் முதல் எழுத்தையும் தலைப்பெழுத்தாக எழுதுகின்றனர்.
சான்று :
உ.வே.சா
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதன்
சுருக்கமே உ.வே.சா.
சிலர் தாத்தா மற்றும் தந்தை பெயர்களின் முதல் எழுத்தை
எழுதுவர். இது பெரும் தவறு. இது ஆணாதிக்க மனப்பான்மையில் உருவான பழக்கமாகும் . இதை
முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
தந்தை இல்லாத குழந்தைகள் தங்கள் தாயின் பெயரையே
தலைப்பெழுத்தாகப் போட்டுக் கொள்ளலாம் என்று 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு
அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தற்போது அந்த அரசாணையில் சில மாறுதல்கள்
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது
அக்குழந்தையின் பெயருக்கு முன்பாகத் தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும்,
அதையடுத்து தந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் தலைப்பெழுத்தாக
பயன்படுத்தலாம் என்று புதிய அரசாணையை ( ஏப்ரல் - 2003 இல் ) தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
அரசின் இந்த ஆணை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தவே 2004 ஆம் ஆண்டு ஒரு தமிழ்த்திரைப்படம் வெளியானது.
M.குமரன்
SON OF MAHALAKSHMI
இத்திரைப்படம் வந்த பிறகே தன் தாய்பெயரின் முதல் எழுத்தை
தலைப்பெழுத்தாக போடலாம் என்ற தெளிவு மக்களிடம் வந்தது. அந்த வகையில் இத்திரைப்படம்
ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.
நம் தமிழ்ப்பண்பாட்டின்படி தாய்தந்தை இருவருமே சரிநிகர்.
" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் "
( கொன்றை வேந்தன் )
"தாய்தந்தையரை தெய்வமாக நினைக்க வேண்டும் "
என்கிறார் ஔவையார்.
நாம் தெய்வமாக வணங்க வேண்டிய தாய்தந்தை பெயர்களின் முதல் எழுத்தையே தலைப்பெழுத்தாக எழுத வேண்டும். ஒரு குழந்தையின் பிறப்புக்கும் அது வாழ்வில் அடைந்திடும் சிறப்புக்கும் தாய்தந்தை இருவருமே காரணமாவர். ஆகையால் தாய்தந்தை இருவர் பெயரின் முதல் எழுத்தையே தலைப்பெழுத்தாக எழுதுவோம்.
சான்று :
மங்கை ( அம்மாவின் பெயர்)
திருநாவுக்கரசு ( அப்பாவின் பெயர்)
அழகன் / அழகி ( குழந்தைகள் பெயர்)
பெயரை எழுதும்போது
இப்படித்தான் எழுத வேண்டும்.
ம.தி.அழகன்
ம.தி.அழகி
இனி நம் குழந்தைகளுக்கு
இவ்வாறே பெயர் எழுதக் கற்றுத் தருவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 51. தலைப்பெழுத்து ( INITIAL) ஆ.தி.பகலன்"
Post a Comment