தமிழில் தலைப்பெழுத்து ( INITIAL)
தமிழில் கையெழுத்து
( SIGNATURE)
1956 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்ட தமிழ்
ஆட்சிமொழிச் சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட
வேண்டும் என 1978 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின் 20 ஆண்டுகள் கழித்து
16.09.1998 அன்று தாய், தந்தை, ஊர் பெயர்களைத் தலைப்பெழுத்தாக எழுதுவோர் அதனைத்
தமிழிலேயே எழுத வேண்டும் என்று அரசு ஆணை ( அரசாணை எண் 431) பிறப்பித்தது.
ஆனால்,
தலைப்பெழுத்து, கையெழுத்து ஆகியவற்றைத் தமிழில் எழுத வேண்டும் என்று
பிறப்பிக்கப்பட்ட இந்த இரு ஆணைகளும் சரிவரப் பின்பற்றப்படவில்லை.
2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் வளர்ச்சித்
துறையின் மானியக் கோரிக்கையில் தமிழில் பெயர் எழுதும்போது தலைப்பெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை பள்ளி,கல்லூரி, அரசு
ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழ் ஆட்சிமொழி சட்டத்தினை முழுமையாக செயல்படுத்தும்
நோக்கில் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு
அலுவலர்கள் , பணியாளர்கள் தமிழிலேயே கையெழுத்து இடவும், அதில் தலைப்பெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட
வேண்டும் என்றும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
பள்ளிகளில் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS)
வழியாகப் பராமரிக்கப்படும் 30 மின்பதிவேடுகளில் மாணவர், பெற்றோர், பாதுகாவலர்
பெயர்களைத் தமிழில் பெயர் பதிவேற்றம் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் அரசுப் பொதுத்தேர்வு ( 10 & 12)
மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கிலத்தில் மட்டுமே மாணவர் பெயர்
குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், தற்போதைய நடைமுறையில் மாணவர் பெயர்,
தலைப்பெழுத்து , அவர்தம் தாய்தந்தை பெயர் என அனைத்தும் ஆங்கிலத்திலும் , தமிழிலும்
இடம்பெறுகிறது. இவ்வளவு மாற்றங்களை தமிழ்வளர்ச்சித்துறை வழியாக தமிழக அரசு கொண்டு
வந்துள்ளது.
ஆனால், மக்களிடம் எவ்வித மாற்றமோ முன்னேற்றமோ இதுவரை
ஏற்படவில்லை என்பது கவலைக்குரியது.
உலகிலேயே தலைப்பெழுத்தை ஒரு மொழியிலும், பெயரை இன்னொரு
மொழியிலும் எழுதுகின்ற இருமொழிப் புலவர்கள் யாரென்றால் நம் தமிழர்கள் தான்.
M.மணி
M. பொன்னி
என்று எழுதுவார்கள். பெயர் தமிழில் இருக்கும்.
தலைப்பெழுத்து மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும்.
ஒருவேளை அவங்க
அப்பா MADE IN ENGLAND ஆக இருப்பாரோ?
தலைப்பெழுத்து 'M' என்று எழுதினால் அது மாடசாமியை
குறிக்குமா? இல்லை மலைச்சாமியை குறிக்குமா? என்ற குழப்பம் வரும்.
மா.மணி என்று எழுதினால் எந்தக் குழப்பமும் வராது.
யாராவது.
மா.Mani என்று (
தலைப்பெழுத்தைத் தமிழுலும், பெயரை ஆங்கிலத்திலும் ) எழுதினால் எப்படி இருக்கும்.
எழுதியவனை முட்டாள் என்று சொல்வார்கள்.
அதுபோலவே
M.மணி என்று ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதிவிட்டு
பெயரை தமிழில் எழுதுபவர்களையும் முட்டாள்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.
தமிழில் தலைப்பெழுத்தை எழுதுகிறோம் என்ற பெயரில் சிலர்
இப்படி எழுதுவார்கள்.
எம்.மணி
எஸ்.முத்து
இவர்கள் எல்லாம் அரை கிறுக்கன்கள்.
தலைப்பெழுத்தையும்,
கையெழுத்தையும் ஒரே மொழியில் எழுதுபவர்களே உண்மையான மனிதர்கள்.
அதுவும் தாய்மொழியில் எழுதுபவர்கள் மாமனிதர்கள்.
நீங்கள் மாமனிதர்கள் என்றால் உங்கள் தலைப்பெழுத்தும்,
கையெழுத்தும் தாய்(தமிழ்) மொழியில் இருக்கட்டும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு எப்போது கடிதம்
எழுதினாலும் தமிழில் தான் எழுதுவார்.அதுவும்
தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும்
தமிழில்தான் எழுதுவார். மேன்மக்கள் மேன்மக்களே!
0 Response to "தமிழ் அறிவோம்! 52. தமிழில் தலைப்பெழுத்து ( INITIAL) தமிழில் கையெழுத்து ( SIGNATURE) ஆ.தி.பகலன்"
Post a Comment