"தாய்வழிக் குடும்பம் "
சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்
காட்டாகும்.
" என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் "
( கலித்தொகை : 08)
இத்தொடரில் "
இவளது மகன் " என்றே கூறப்பட்டது. " இவனது மகன் " எனக்
கூறப்படவில்லை. சங்க காலத்தில் காணப்பட்
தாய்வழிச் சமூகத்தின் நிலையை இது காட்டுகிறது.
சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய
முறை ( Matrilocal) இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச்
சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.
" தம் ஊரோளே, நன்னுதல் ; யாமே,
(அகநானூறு - 24)
தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு
உரியவர்களாக இருப்பதால் பெண்குழந்தைகளின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும்
செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன
என்பதை ஒரு மருதத்திணைப் பாடல் (குறுந்தொகை -295) தெளிவாகவும் விளக்கமாகவும்
கூறுகிறது.
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி
முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின்வழி அறிய முடிகிறது.
" பொன்னைக் கொடுத்து பெண்ணை எடு " என்ற
பழமொழியின் மூலமாக அந்தக் காலத்தில் ஆண் வீட்டார்தான் பெண் வீட்டாருக்கு மணக்கொடை
( வரதட்சணை) கொடுத்தார்கள் என்பதை அறிய
முடிகிறது.
ஔவையார், வெள்ளி வீதியார், நப்பசலையார், ஆண்டாள்,
காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பெண்பால் புலவர்கள் ஆண்களுக்கு நிகராக அறிவில் சிறந்து விளங்கினர். அவர்களின் புலமையை
ஆராய்ந்து பார்க்கும்போது அந்த காலத்தில் பெண்களுக்கும் சரிநிகராக கல்வி
வழங்கப்பட்டு இருப்பதை அறியலாம்.
இப்படியெல்லாம் பெண்களைத் தமிழ்ச்சமூகம் போற்றி
வளர்த்ததால்தான் கவிமணி பெண்களை இவ்வாறு
போற்றினார்.
" மங்கையராய்ப் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா "
பெண்மையைப் போற்ற இதைவிட வேறு சொற்கள் தமிழில் உண்டோ?
பெண்ணை பெண்ணாகவே மதிக்காத இந்த உலகத்தில் தான் ,
தமிழர்கள் பெண்களைத் தெய்வமாக்கி அழகு பார்த்தார்கள். தமிழகத்தில் உள்ள
கோவில்களில் 80% விழுக்காடு பெண் தெய்வங்களுக்கே உள்ளன.
இப்படி பெண்மையைப் போற்றி மகிழ்ந்த நம் நாட்டில்
பெண் எப்படி அடிமையானாள்?
பெண் எப்படி உரிமை இழந்தாள்?
பெண் எப்படி கல்வி இழந்தாள்?
எல்லாம் வந்தேறி ( அந்நிய நாடுகளில் இருந்து வந்தவர்)
களால்தான்.
பெண்களை அடிக்கி ஆள நினைத்துவிட்டு ஆண்டுக்கொருமுறை (
மார்ச் - 08) " மகளிர் தின விழா
" கொண்டாடுகிறார்கள்.
ஆண்டுக்கொருமுறை கொண்டாட வேண்டியவர்கள் அல்ல பெண்கள்!
ஆயுள் முழுவதும் கொண்டாட வேண்டியவர்கள்தான் பெண்கள்!
சங்க காலத்தில் பெண்களுக்கு கொடுத்த உரிமையை
சம காலத்திலும்
கொடுப்போம்.
அதன்பின்
கொண்டாடுவோம்
மகளிர் தின விழாவை!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 53. "தாய்வழிக் குடும்பம் " ஆ.தி.பகலன்"
Post a Comment