" யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் "
தமிழில் உள்ள புகழ்பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று .
இதை கூறியது யார் ? எந்த நூலில் இந்தப்
பாடல் இடம்பெற்று உள்ளது? என்று கேட்டால்
பலருக்குத் தெரியாது.
திருமூலர்
இயற்றிய "திருமந்திரம் " என்னும் நூலில் உள்ள 85 ஆவது பாடல்தான் இது.
எனக்குக் கிடைத்த இன்பமானது இந்த உலக மக்களுக்கும்
கிடைக்க வேண்டும் என்று பரந்த மனத்தோடு வேண்டுகிறார் திருமூலர்.
தமிழ் மொழியில் உச்சம் தொட்ட தொடர் இது. தமிழர்களின்
வாழ்க்கை முறை இதுதான் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டும் உன்னதமான தொடர் இது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும்
" யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் " என்று
வாழ்ந்துவிட்டால் இந்த உலகில் போர் ஏது?
பூசல் ஏது?
வறுமை ஒரு பக்கம்
வசதி ஒரு பக்கம் என்ற நிலை ஏது?
இந்த உலகில் காகங்கள் மட்டுமே இந்தக் கொள்கையை
உண்மையாகக் கடைப்பிடிக்கின்றன. தனக்கு எது கிடைத்தாலும் அது மற்றவர்களுக்கும்
கிடைக்க வேண்டும் என்று எண்ணி எல்லா காகங்களையும் அழைத்து உண்கின்றன. ஆகவே,
போட்டியின்றி ஒருமனதாக எல்லா காகங்களையும்
உயர்திணைப் பட்டியலில் சேர்த்து விடுவோம்.
மனிதர்களிடம் இருக்கும் ஒரே ஒற்றுமை தனக்கு வந்த துன்பம்
எல்லோர்க்கும் வரவேண்டும் என்று நினைப்பதுதான்.
" யான்பெற்ற துன்பம் பெறுகஇவ் வையகம் "
இன்பம் வருவதாக இருந்தால் அது தனக்கு மட்டுமே வரவேண்டும்
. துன்பம் வருவதாக இருந்தால் அது எல்லோர்க்கும் வரவேண்டும்.
இதுதான் இன்றைய மனித சமுதாயத்தின் கோட்பாடாக இருக்கிறது.
இந்நிலை மாற வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், வேலை என
அனைத்திலுமே தனக்குக் கிடைத்ததுபோல் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டும் என்ற
எண்ணம் எல்லோரிடத்திலும் வரவேண்டும் .
அப்போதுதான் இந்த உலகம் சமநிலை அடையும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 54. யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் ஆ.தி.பகலன்"
Post a Comment