" கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே "
இத்தொடரை நம்மில் பலர் கேட்டிருப்போம். அதன் பொருளையும்,
அது இடம்பெற்ற நூலையும் இப்போது அறிந்து கொள்வோம்.
இத்தொடர் இடம்பெற்ற நூல் " மூதுரை "
இந்நூலுக்கு " வாக்குண்டாம் " என்ற பெயரும் உண்டு. 'ஔவையார்' இயற்றிய இந்நூலில் 31 வெண்பாக்கள்
உள்ளன.
" அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். ( மூதுரை - 04)
பாலினை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது.
கடலில் விளையும் சங்கினை நெருப்பில் இட்டுச் சுட்டாலும் அதனுடைய வெண்மை நிறம்
மாறவே மாறாது. அதுபோலவே அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மேன்மக்களாகிய நல்லோர்
வறுமையுற்று வாடும் காலத்திலும் தம்முடைய உயரிய குணநலன்களில் இருந்து சிறிதும்
விலகிச் செல்ல மாட்டார். ஆனால் நட்பின் மேன்மையை அறியாக் கீழோர் , எத்துணை நெருக்கமாக
நம்முடன் பழகினாலும், அவர் நமக்கு உற்ற நண்பராக எக்காலத்திலும் இருக்க மாட்டார்.
நல்ல நண்பர்களையே நாம் நட்பாகக் கொள்வோம்.
அவர்கள்தான் எப்போதும் நமக்கு துணையாய் இருப்பார்கள்.
மேன்மக்கள் மேன்மக்களே!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 56. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ஆ.தி.பகலன்"
Post a Comment