அஃது /இஃது
அது / இது
அஃது / இஃது
உயிரெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொற்களின் முன்னே அஃது, இஃது என்னும் சுட்டுப்பெயர் வரும்.
சான்று :
அஃது இங்கே உள்ளது.
அஃது இல்லை .
அஃது ஆமை.
அஃது ஏணி.
இஃது ஒரு வீடு.
இஃது ஓர் உயிரி.
இஃது உரல்.
அது / இது
உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொற்களின் முன்னே அது, இது என்னும் சுட்டுப் பெயர் வரும்.
சான்று :
அது கன்று.
அது நகரத்திற்கு செல்லும் சாலை.
அது புத்தகம்.
இது கண்ணாடி.
இது பேருந்து நிலையம்.
இது பள்ளிக்கூடம்.
அஃது / இஃது
அது / இது
என்னும் சுட்டுப்பெயர்களை இடம் அறிந்து பயன்படுத்துவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 57. அஃது /இஃது அது / இது ஆ.தி.பகலன்"
Post a Comment