ஒருமை, பன்மை வேறுபாடு!
'அல் ' என்ற அடிச்சொல்லில் பிறந்த சொற்கள்தான் அன்று,
அல்ல, அல்லன், அல்லள், அல்லர் என்பன.
' அல் ' என்ற சொல்லுக்கு 'இல்லை' என்பது பொருள் ஆகும்.
ஒருமை (
SINGULAR)
அவன், அவள், அது, இவன், இவள்,இது என்று தொடங்கும் சொற்கள் ஒருமையைக் குறிக்கும்.
அன்று , அல்லன் , அல்லள் என முடியும் சொற்களும்
ஒருமையைக் குறிக்கும்.
சான்று :
அது அன்று.
அவன் மனிதன் அல்லன்.
அவள் பெண் அல்லள்.
அது மரம் அன்று.
இது ஒரு வீடு அன்று.
அந்தக் கேள்விக்கு இது விடையன்று.
அவன் கவிஞன் அல்லன்.
அவள் பாடகி அல்லள்.
பன்மை ( PLURAL)
அவர்,அவர்கள், இவர், இவர்கள்
அவை, இவை
என்று தொடங்கும் சொற்கள் பன்மையைக் குறிக்கும்.
அல்லர், அல்ல
என முடியும் சொற்களும் பன்மையைக் குறிக்கும்.
சான்று :
தாய்நாட்டுப் பற்று இல்லாதார் மக்கள் அல்லர்.
அவர்கள் மனிதர்கள் அல்லர்.
அவர் அல்லர்.
இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல.
அவை பூக்கள் அல்ல.
இவை வீடுகள் அல்ல.
அங்குள்ளவை நூல்கள் அல்ல.
ஒரு தொடரில் எழுவாய் ஒருமையாக இருந்தால் ஒருமை
வினைமுற்றையும்,
எழுலாய் பன்மையாக இருந்தால் பன்மை வினைமுற்றையும்
பயன்படுத்த வேண்டும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 58. ஒருமை, பன்மை வேறுபாடு! ஆ.தி.பகலன்"
Post a Comment