தமிழர்கள் கண்ட பை (π) யின் மதிப்பு!
பையின் மதிப்பு ( π) என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன்
விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். இது தோராயமாக 3.14159 க்கு சமமாக இருக்கும்.
ஒரு வட்டத்தில் நீங்கள் சுற்றளவை ( வட்டத்தைச் சுற்றியுள்ள மொத்த தூரம்)
விட்டத்தால் வகுத்தால் , நீங்கள் அதே எண்ணைப் பெறுவீர்கள். வட்டம் பெரியதாக
இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் பையின் மதிப்பு அப்படியே இருக்கும். பையின்
சின்னம் π என்று குறிக்கப்படுகிறது. இது கிரேக்க எழுத்துகளில் 16
ஆவது எழுத்து ஆகும். இது கணித மாறிலியைக் குறிக்கப் பயன்படுகிறது.
பழந்தமிழ் இலக்கண நூலான " காக்கைப் பாடினியம்"
கூறும் பை ( π) யின் மதிப்பை க் காண்போம்.
"விட்டமோர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
திகைப்பன சுற்றுத் தானே "
(காக்கைப்பாடினியம்)
விட்டத்தை ' வி' என எடுத்துக்கொள்வோம்.
1. திகைவர = வி ஆகும்.
2. விட்டமோர் ஏழு செய்து = வி/7 ஆகும்.
3.நான்கு சேர்த்து = வி +4×( வி/7) ஆகும்.
4. சட்டென இரட்டி செயின் = ( 2 ( வி+ (4வி/7) ஆகும்.
இதன்படி
முறைசெய்தால் ( 2× ( (11வி)/7) = 22/7 .
π = 22/7
அக்காலத்தில் இந்த சூத்திரங்களின் உதவியுடன் தான்
வண்டிச் சக்கரங்கள் மிகத் துல்லியமாகச் செய்யப்பட்டன.
வட்டத்தின் பரப்பளவு πr2 என்பது தற்காலத்தில் கணிதச் சூத்திரமாக
பயன்படுத்துகின்றனர். இச்சூத்திரம் சொல்லப்படுவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே " கணக்கதிகாரம் " என்னும் நூலில் பாடல் வடிவில் , அதற்கான
வழியைப் பதிவு செய்துள்ளனர் தமிழர்கள்.
"வட்டத்தரை கொண்டு விட்டத் தரைதாக்கச்
சட்டெனத் தோன்றும் குழி".
(கணக்கதிகாரம் -
46)
வட்டத்தரை என்பது சுற்றளவில் பாதி
விட்டத்தரை = விட்டத்தில் பாதி.
சுற்றளவில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்க
பரப்பளவு கிடைக்கும் என்றனர்.
( குழி - பரப்பளவு)
சான்று :
விட்டம் : 14
வட்டம் : 44
விட்டத்தில் பாதி = ஆரம் (r) = 7
வட்டத்தில் பாதி 44/2 = 22.
22 × 7 = 154.
வட்டத்தின் பரப்பளவு = 154
தற்கால சூத்திரத்தின்படி வட்டத்தின் பரப்பு = πr2
22/7×7×7 = 154.
இப்படித் தமிழர்களால் கண்டறியப்பட்ட பை (π ) கணித
உலகில் பல சிக்கலான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பயன்பட்டு வருகிறது.
இன்று ( மார்ச் - 14)
உலக பை ( π) தினம்.
பை ( π ) யின் மதிப்பு
தோராயமாக 3.14 ஆகும். அமெரிக்க தேதி முறையில் குறிப்பிடும்போது ( மாதம் /
தேதி) மார்ச் 14 தேதியை 3/14 என்று குறிப்பிடுவர். ஆகையால் அந்த மார்ச் 14 ஆம்
தேதியை (3/14) "உலகை பை " நாளாக கொண்டாடுகின்றனர்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 59. தமிழர்கள் கண்ட பை (π) யின் மதிப்பு! ஆ.தி.பகலன்"
Post a Comment