தமிழர்கள் கண்ட
விழிப்பொலி ( ALARM)
இக்கால மக்கள் அதிகாலையில் எழுந்து இருவேளை ( காலை, மதியம்)
உணவு சமைத்து அலுவலகம் செல்ல மிகவும் அல்லல்படுகின்றனர்.
அதிகாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க
விழிப்பொலியை ( ALARM) பயன்படுத்துகின்றனர் .
அந்தக் காலத்தில் அதிகாலை வேளையில் எழுந்து எப்படி
தொழிலுக்கு சென்றார்கள் என்ற கேள்வி
எழுகிறது.
அக்கால மக்கள் தாங்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய நேரத்தைக் கீழே குறிப்பிட்டுள்ள
பறவைகளின் ஒலிமூலம் தெரிந்துகொண்டு புறப்படுவார்கள்.
1. கரிச்சான் குருவி ( இரட்டைவால் குருவி) அதிகாலை 3
மணி.
2.செம்போத்து - 3.30 மணி
3.குயில் - 4 மணி
4. சேவல் - 4.30 மணி
5. காகம் - 5 மணி
6. கௌதாரி - 5.30 மணி.
7. மீன்கொத்தி - 6 மணி.
இவ்வாறாக, பறவைகள் ஒலியெழுப்பும் நேரத்தை வைத்தே
காலத்தைக் கணக்கிட்டு தங்கள் தொழிலுக்கான கால அட்டவணையை வகுத்துக் கொண்டனர்
பழந்தமிழர்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 60. தமிழர்கள் கண்ட விழிப்பொலி ( ALARM) ஆ.தி.பகலன்"
Post a Comment