" அ, ஆ , இ , " இவற்றின் சிறப்புகள்.
நமக்கு வாழ்க்கை
கொடுத்தவர்கள் என்று நால்வரை சொல்லலாம்.
இவர்களை அகர வரிசைப்படி இப்படியும் எழுதலாம்.
அ - அம்மா, அப்பா
ஆ - ஆசிரியர்
இ - இறைவன் / இயற்கை
(இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனையும், இயற்கையை
நம்புபவர்கள் இயற்கையையும் எழுதிக் கொள்ளலாம்.)
தமிழின் முதல் எழுத்தான 'அ' வில் நம்மை ஈன்றெடுத்த
அம்மா, அப்பாவையும்
இரண்டாவது எழுத்தான ' ஆ' வில் நமக்கு கல்வி தந்த
ஆசிரியரையும், மூன்றாவது எழுத்தான ' இ ' யில் நம்மை காக்கின்ற இறைவன் / இயற்கை
யையும் எழுதலாம்.
அதுபோலவே,
நாம் இன்பமாக வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உடை,உண்டி
(உணவு) , உறையுள் (இருப்பிடம்)
ஆகியவற்றையும் வரிசைப்படுத்தலாம்.
உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் தான்
மக்களின் அடிப்படைத் தேவைகளாகும்.
அ - அன்னம் (உணவு)
ஆ - ஆடை
இ - இருப்பிடம்.
நமக்கு வாழ்வு தந்தவர்களையும், நம் நல்வாழ்க்கைக்கான அடிப்படைத்
தேவைகளையும்
"அ,ஆ,இ" என்ற
மூன்று உயிரெழுத்துகளில் அடங்கி ,
இவையே நமக்கு உயிர் போன்றவை என்பதையும் , தமிழ் எழுத்துகளில் முதல் மூன்றாக (அ,ஆ,இ) விளங்குவதால் உலகில் உள்ளவற்றில் இவையே முதன்மையானது என்பதையும் இது
உணர்த்துகிறது.
இதுபோன்ற சிறப்புகளைத் தமிழைத்தவிர, உலக மொழிகளில் வேறு
எவற்றிலும் காண முடியாது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 61. " அ, ஆ , இ , " இவற்றின் சிறப்புகள். ஆ.தி.பகலன் "
Post a Comment