" ஆதிரை "
ஆது + இரை = ஆதிரை.
ஆது - தெப்பம், படகு, வாகனம் ( கடக்கப் பயன்படுவது)
இரை - உணவு.
ஆதிரை :
உணவைக் கொண்டு சேர்க்கும் வாகனம் .
உணவைக் கொண்டு சேர்க்கும் பாத்திரம் என்றும் பொருள்
கொள்ளலாம். அந்த பாத்திரத்தையே கதாபாத்திரமாக வடிவமைத்து " மணிமேகலை "
காப்பியமாக்கி இருக்கிறார் சீத்தலைச் சாத்தனார்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் மணிமேகலை.
அந்தக் காப்பியத்தின் தலைவியான மணிமேகலையின் கையில்
கிடைத்த அட்சயப் பாத்திரத்தில் ( அமுதசுரபி) முதன்முதலில் உணவிட்டு நிரப்பிய
கற்புக்கரசி தான் ஆதிரை.
ஒரு கற்புக்கரசியின் கையால் அமுதசுரபியில் முதன்முதலில் உணவு வாங்கினால் ,
அந்த உணவு அள்ள அள்ளக் குறையாமல் பொங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் தனக்குக் கிடைத்த அமுதசுரபியில்
ஆதிரையின் கையினால் முதன்முதலில் உணவு வாங்கினாள் மணிமேகலை.
அமுதசுரபியில் ஆதிரை பிச்சையிட்ட காட்சி இதோ!
ஆதிரை இல்லத்தின் முன் மணிமேகலை நின்றாள். அம்மா என்று
அழைத்தாள். தன் எதிரே வந்து நின்ற ஆதிரையைப் பார்த்து,
"தாயே! உங்களது கற்பின் பெருமையைப் பற்றிக்
கேள்விப்பட்டேன். என் பெயர் மணிமேகலை. மணிபல்லவத் தீவினில் ஆபுத்திரன் என்பவன்
விட்டுச்சென்ற அமுதசுரபிதான் இப்போது என் கையில் உள்ள அட்சயப்பாத்திரம். உங்கள்
கைகளினால் பெறப்படும் முதல் பிச்சை
சோற்றினால்தான் இந்தப் பாத்திரம் தான்இழந்த திறனை மீண்டும் பெறும் என்பதால்
உங்களிடம் பிச்சைக் கேட்டு வந்துள்ளேன் " என்றாள் மணிமேகலை.
அதைக் கேட்ட ஆதிரை,
" இதோ ஒரு நொடியில் வருகிறேன் " என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று அன்று சமைத்த உணவைக் கொண்டு வந்து
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் இட்டு நிரப்பினாள். அன்றுமுதல் வற்றாமல்
சுரந்து பலரது பசியைப் போக்கும் அருமருந்தாக மாறியது அமுதசுரபி.
அந்த அமுதசுரபி இப்போது எங்கு உள்ளது என்ற ஆய்வுக்கு
நாம் போகவேண்டாம் .
அடுத்தவரின் பசியைப் போக்கும் எந்த ஒரு மனிதனும்
அமுதசுரபி தான்.
ஆம்
"நடமாடும்
அமுதசுரபி "
யாரேனும் பசி என்று வந்தால் அந்த இடத்தில் நாம்
அமுதசுரபியாய் மாறுவோம்!
"
அமுதசுரபி " என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மணிமேகலை மட்டுமே . அந்த அமுதசுரபிக்கே உயிர் கொடுத்த
ஆதிரையை நினைக்க மறந்து விடுகிறோம்.
ஆதிரை இல்லாமல் அமுதசுரபி இல்லை.
பசியைப் போக்குபவர்கள் அமுதசுரபி என்றால் அந்த பசியைப்
போக்கக் காரணமாக இருப்பவர்களை
ஆதிரையாகத்தானே பார்க்க வேண்டும்.
அப்படியென்றால் ,
இன்று பலரது பசியைப் போக்க காரணமாக இருக்கும்
உணவகங்களுக்கு நாம் ஏன் ஆதிரை என்று பெயர் வைக்கக் கூடாது?
"ஆதிரை
அறுசுவை உணவகம் "
என்று அழகு தமிழில் பெயர் வைத்து அழைத்தால் எவ்வளவு
அழகாக இருக்கும்.
தமிழர்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள். பலரது
பசியைப்போக்கக் காரணமாக இருந்த அமுதசுரபிக்கு உயிர் கொடுத்த ஆதிரையை என்றும் நாம்
நன்றியோடு போற்ற வேண்டுமானால் இனி தமிழகத்தில் உள்ள உணவகங்களுக்கு
"ஆதிரை
அறுசுவை உணவகம்
"
என்று பெயர்வைத்து மகிழ்வோம்!
ஆங்கிலத்திலும் வடமொழியிலும் ( சமற்கிருதம்)
உணவகங்களுக்கு பெயர்வைத்து நம் அடையாளத்தை
இழந்தது போதும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
அனைத்து உணவகத்திற்கும்
ஆதிரை
அறுசுவை உணவகம்
என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக
மதுரை வாடிப்பட்டியில்
ஆதிரை
அறுசுவை உணவகம்
என்று பெயர் வைத்து
ஆதிரைக்கு பெருமை சேர்த்துள்ள இந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் நன்றி சொல்லுவோம்.
0 Response to "தமிழ் அறிவோம்! 62 " ஆதிரை " ஆ.தி.பகலன்"
Post a Comment