" இணையர் " ( Couple)
இல்லற வாழ்க்கை வாழும்
இணையர் (கணவன் மனைவி) எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் வழி
நின்று பார்ப்போம்.
" செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வோர்க்கு உரை. ( குறள் - 1151)
புதிதாக இல்லற வாழ்வில் இணைந்த தலைவனும், தலைவியும் முதன்முதலாக பிரிந்து
செல்லும்போது அவர்களின் மனநிலை எப்படி
இருக்கும் என்பதைச் சொல்கிறது இந்தத் திருக்குறள்.
தலைவன் பொருள் ஈட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டவுடன் தலைவியை
விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலைமைக்கு உள்ளாகின்றான். தலைவியிடம்
சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று நினைக்கின்றான். மெதுவாக தன் நிலையை எடுத்துக்
கூறி பணி முடிந்தவுடன் விரைவாக வந்துவிடுவேன் என்கிறான்.
தலைவனை விட்டு பிரிய மனமில்லாமல் தலைவி தவிக்கிறாள்.
அதனால், "நீ என்னைவிட்டு பிரியமாட்டாய் என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்
" .
ஒருவேளை, " நீ என்னைவிட்டு பிரிந்துதான் செல்ல
வேண்டும் என்று விரும்பினால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ
அவர்களிடம் சென்று நீ விடைபெற்றுச்
செல்" என்று சொல்லி கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.
அதாவது, "
நீ என்னைப் பிரிந்து சென்றால் ஒரு மணித்துளி கூட நான் உயிர் வாழ மாட்டேன். அடுத்த
நொடியே உயிர் துறப்பேன் " என்பதை
தலைவனுக்கு உணர்த்துகிறாள் தலைவி.
கணவன் வேண்டுமா?
கைநிறைய செல்வம் வேண்டுமா?
என்றால் "நான் கண்மூடும்வரை என் தலைவன் என்னுடன்
இருந்தாலே போதும். வேறொன்றும் தேவையில்லை"
என்பதே தலைவியின் நிலைப்பாடு.
"ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமலும், விட்டு
விலகாமலும் இருப்பதே இல்லற வாழ்வின்
இலக்கணம் " என்று வகுத்துக்
காட்டியுள்ளார் வள்ளுவர்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 65. " இணையர் " ( Couple) ஆ.தி.பகலன்"
Post a Comment