
எத்தனை / எத்துணை வேறுபாடு
எத்தனை :
எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என்பன போல எண்ணிக்கையைக் குறித்து நிற்கும்.
சான்று :
1.எத்தனை நூல்கள் வேண்டும்?
2.அந்த தொடர்வண்டியில் எத்தனை பெட்டிகள் உள்ளன?
3.ஒரு கையில் எத்தனை விரல்கள் இருக்கின்றன?
4.அந்தக் கூடையில் எத்தனை பழங்கள் உள்ளன?
5.தேர்வில் எத்தனை மாணவர்கள் கலந்து கொண்டார்கள்?
எத்துணை :
அளவு, காலம், பயன், பருமன், பண்பைக் குறிக்க 'எத்துணை ' என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சான்று :
1.எத்துணையாயினும் ஈதல் நன்று.
2.இம்மரம் எத்துணை ஆண்டு பழமையானது?
3. அவள் எத்துணை அழகு?
4.அவர் எத்துணை நல்லவர்?
5 .நான் எத்துணை நேரமாகக் காத்திருக்கிறேன் தெரியுமா?
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 69. எத்தனை / எத்துணை வேறுபாடு ஆ.தி.பகலன்"
Post a Comment