கோவில் / கோயில்
எது சரி?
"இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் "
(நன்னூல் - 162)
என்ற விதிப்படி நிலைமொழி (முதலில் வரும் சொல்) ஈற்றிலும், வருமொழி (இரண்டாவதாக வரும் சொல் ) முதலிலுல்
உயிர் எழுத்து வந்தால் "உடம்படுமெய்
(ய்,வ்) எழுத்து தோன்றும்.
அந்த வகையில்
நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ வந்தால் யகர (ய்) உடம்படு மெய்யும், ஏனைய
உயிர் எழுத்துகள் (அ,ஆ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ ) வந்தால்
வகர (வ்) உடம்படுமெய்யும் வரும். நிலைமொழி
எழுத்துகளில் மட்டுமே இந்த எழுத்துகளைக்
காண வேண்டும். வருமொழியில் எந்த உயிர் எழுத்து வந்தாலும் பரவாயில்லை.
திரு(ர்+உ) + அண்ணாமலை
திரு+ வ்+ அண்ணாமலை
திருவண்ணாமலை.
பனை (ன்+ஐ) +ஓலை
பனை+ய்+ஓலை
பனையோலை.
கோ - அரசன், இறைவன்.
இல் - இல்லம் ' இருப்பிடம்.
"கோவில் " என்றால் அரசன் இருப்பிடம் (அரண்மனை), இறைவன்
இருப்பிடம் என்று பொருளாகும்.
நிலைமொழி இறுதி எழுத்து (க்+ஓ) "ஓ" வும் வருமொழி முதல்
எழுத்தான 'இ' (இல்) யும் சேரும் போது
"வ்" என்ற உடம்படுமெய் தோன்றி (கோ+வ்+இல் ) கோவில் என்று புணரும் .
ஆக 'கோவில் 'என்பதே சரி .
கோயில் என்பது வழூஉச்சொல் (மக்கள் தவறுதலாக பயன்படுத்துவது ) ஆகும்.
இனி "கோவில் " என்றே எழுதுவோம் .
இன்று செய்தித்தாளைப் பாருங்கள்
"அயோத்தி இராமர்
கோவில் திறப்பு விழா" என்றே இருக்கும் .
தமிழ்நாட்டில் உள்ள
"கோவில்" என்ற ஒட்டுப் பெயர்கள் கொண்ட நகரங்களைப் பாருங்கள்.
நாகர்கோவில்
கோவில்பட்டி
காளையார் கோவில்
திருக்கோவிலூர் .
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 7 - கோவில் / கோயில் எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment