"சாதி இரண்டொழிய வேறில்லை "
" சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி " ( நல்வழி - 02)
இந்த உலகில்
இரண்டே இரண்டு சாதிதான் உள்ளது. இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் எதுவும்
இல்லை.
அந்த இரண்டு
சாதிகள் எவை தெரியுமா?
நீதி நெறிமுறை தவறாது நல்வழியில் நின்று, தன் செல்வத்தை
எல்லாம் வறியோர்க்கு வாரி வழங்குபவர்கள் ( இட்டார்) பெரியோர் ( உயர் சாதியினர்) என்றும்
யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் வாழ்பவர்கள் ( இடாதோர்) இழிகுலத்தோர் ( தாழ்ந்த சாதியினர் ) என்றும் அற நூல்களில் ( பட்டாங்கில்) உள்ளன.
தமிழர்கள் கண்ட
சாதி முறை இதுவே.
இதைத்தவிர வேறு எந்தச்
சாதிகளும் தமிழினத்தில் இல்லை.
மற்றவர்களிடம் நீங்கள் என்ன சாதி என்று கேட்க நினைத்தால்
இனி இதை நினைவில் வைத்துக் கொண்டு
கேளுங்கள்.
நீ
எதை சாதிக்கப் பிறந்தவன் என்று
கேளுங்கள்!
நீ
எந்த சாதியில் பிறந்தவன் என்று
கேட்காதீர்கள்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 71. சாதி இரண்டொழிய வேறில்லை ஆ.தி.பகலன் "
Post a Comment