
ஆயுள் பெருக! அறம் செய்க!
வண்ண வண்ண மிட்டாய்களுடன்
ஆரம்பிக்கும் மனித வாழ்க்கை
வண்ண வண்ண மாத்திரைகளுடன் முடிகிறது!
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்பதற்கேற்ப இளம்வயதில் நாவடக்கம் இன்றி நாம் உண்ணும் உணவுகளே முதுமையில் எண்ணற்ற நோய்களை நமக்கு பரிசாகத் தருகின்றன.
தங்கள் ஆயுளை
நீட்டித்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் நோயோடு போராடுகிறார்கள் மனிதர்கள்.
எவ்விதப் போராட்டமும் இன்றி மனிதன் நீண்ட ஆயுளோடு வாழ என்னதான் வழி?
"உயிர்க்குக் காப்பு அறமே " என்கிறது அறநெறிச்சாரம்.
" மூப்பொடு தீப்பிணி முன்உறீஇப் பின்வந்து
கூற்ற அரசன் குறும்புஎறியும்! - ஆற்ற
அறஅரணம் ஆராய்ந்து அடையின்அஃது அல்லால்
பிறஅரணம் இல்லை உயிர்க்கு. ( அறநெறிச்சாரம் - 22)
எமனாகிய அரசன் மூப்பு ( முதுமை) , கொடிய பிணி ( தீரா
நோய்) ஆகிய தன் படைகளை முன்னே அனுப்பிவிட்டு பின்னர்த் தான் அடைந்து , உடலாகிய
காப்பமைந்த கோட்டையை அழிப்பான். பல வகைகளிலும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மனித
உடலைக் காக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பு அரண் அவரவர் செய்யும் அறமே.
மண்ணுலகில் வாழும்
மனிதர் யாவரும் தொடர்ந்து அறச்செயல்களைச் செய்வாராயின் அவர்களுக்கு மூப்பு
ஏது? முழு ஆயுளைக் கொல்லும் கொடிய பிணி ஏது?
ஆகவே,
ஆயுள் பெருக!
அறம் செய்க!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 75. ஆயுள் பெருக! அறம் செய்க! ஆ.தி.பகலன் "
Post a Comment