தமிழ் அறிவோம்! 85. தமிழ்நாடு அரசு / தமிழ்நாட்டரசு - ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 85. தமிழ்நாடு அரசு / தமிழ்நாட்டரசு - ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  85. தமிழ்நாடு அரசு / தமிழ்நாட்டரசு  - ஆ.தி.பகலன்

 


தமிழ்நாடு அரசு / 
தமிழ்நாட்டரசு எது சரி?

'தமிழ்நாடு ' என்பது ஒரு மாநிலம். அது அரசு ஆகாது. 

"தமிழ்நாட்டரசு" என்பதே சரி. 

"தமிழ்நாட்டரசு " என்பது நான்காம் வேற்றுமையின் தொகைநிலைத் தொடராகும். தொகைநிலையை விரிநிலையாக்கினால் , தமிழ்நாட்டுக்கு அரசு ' என்று சரியான பொருளைத் தரும். 

சென்னையில் உள்ள ' தலைமைச்செயலகத்தில் ' தமிழ்நாடு அரசு ' என்று எப்போது எழுதப்பட்டதோ அன்றுமுதல் இந்தக் குழப்பம் நீடிக்கிறது. 

"தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் " என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிப்பிடும்போது " தமிழ்நாடு அரசு " என்று ஏன் குறிப்பிட வேண்டும்? 

இதற்கு இலக்கணம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

" நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்

ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே " ( நன்னூல் - 183) 

நிலைமொழி ஈற்றில் டகரத்தையும் (ட்) , றகரத்தையும் (ற்) பற்றுக்கோடாகக் கொண்டுவரும் நெடில்தொடர்க் குற்றுகரமும், உயிர்த்தொடர் குற்றுகரமும் வருமொழியோடு புணரும்போது தாம் ஊர்ந்து வரும் ஒற்றுகள் இரட்டித்துப் புணரும். 

சான்று : 

நாடு + பண் = நாட்டுப்பண்.

நாடு +அரசன் + கோட்டை = நாட்டரசன் கோட்டை.

ஏடு + சுவடி = ஏட்டுச்சுவடி.

வயிறு+ பசி = வயிற்றுப்பசி.

முரடு + காளை = முரட்டுக்காளை. 

மேற்கண்ட விதியின்படியும்,  சான்றுகளின்படியும்  பார்த்தால்,

தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்று எழுதுவதே சரியாகும்.  

இனியாவது, 

தமிழ்நாட்டரசு ,

தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்று பிழையின்றி எழுதுவோம். 

"தமிழ்நாடு அரசு " என்று சொல்வது இந்திய அரசை ஆங்கிலத்தில் India government என்று சொல்வதற்கு ஒப்பானது.

Government of India

Indian government என்று சொல்வதுதானே சரியானது.

அதுபோலத்தான் 'தமிழ்நாட்டரசு' என்று சொல்வதே சரியானது.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to "தமிழ் அறிவோம்! 85. தமிழ்நாடு அரசு / தமிழ்நாட்டரசு - ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel