அகநானூறா? குறுந்தொகையா?
ஓர் ஊரில் நண்பர்கள் இருவர் இருந்தார்கள். இருவருமே
சொற்பொழிவாளர்கள் .
பட்டிமன்றம், வழக்காடு மன்றம் , கவியரங்கம் உள்ளிட்ட
பல்வேறு நிகழ்ச்சியில் இருவருமே கலந்து கொள்வது வழக்கம்.
மேடைப்பேச்சு முடிந்ததும் விழாக் குழுவினர் அளிக்கும்
மதிப்பூதியத்தை ( பணத்தை)ப் பெற்றுக் கொண்டு செல்வர்.
அப்படி செல்லும் போது " என்ன இன்று அகநானூறா? குறுந்தொகையா? என்று ஒருவரை ஒருவர் மாற்றி
மாற்றி கேட்டுக் கொள்வர்.
சில சமயம் 'அகநானூறு' என்றும், சில சமயம் 'குறுந்தொகை'
என்றும் சொல்லிக் கொள்வர்.
இவர்களின் இந்த உரையாடலை பலமுறை கவனித்த ஒருவர், " இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்
" என்பது விளங்காமல் குழம்பிப் போனார்.
எப்படியாவது இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வத்தில் அவர்களிடமே சென்று கேட்டு விடலாம் என்று முடிவெடுத்தார்.
அந்த பேச்சாளர்களிடம் சென்று, "ஒவ்வொரு
நிகழ்ச்சியும் முடிந்த பின் அகநானூறா? குறுந்தொகையா? என்று வினவுகிறீர்களே, அதன்
பொருள் என்ன? " என்று கேட்டார்.
அந்த பேச்சாளர்களில் ஒருவர், நாங்கள் எதிர்பார்த்ததை விட
பணம் அதிகமாக கிடைத்துள்ளதா? குறைவாக கிடைத்துள்ளதா? என்பதை அறிந்து
கொள்வதற்குத்தான் அப்படி கேட்டுக் கொள்வோம் " என்றார்.
'தொகை ' என்ற சொல்லுக்குப் பணம் என்ற பொருளும் உண்டு.
'அகநானூற்றின்'
வேறு பெயர் ' நெடுந்தொகை '
அகநானூறா?
குறுந்தொகையா?
என்ற வினாவுக்கான பொருள் இதுதான்.
'நெடுந்தொகை' என்றால்
'எதிர்பார்த்ததைவிட பணம் அதிகமாகக் கிடைத்துள்ளது' என்று
பொருளாகும்.
'குறுந்தொகை' என்றால்' எதிர்பார்த்ததைவிட பணம் குறைவாகக் கிடைத்துள்ளது' என்று பொருளாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 89 அகநானூறா? குறுந்தொகையா? - ஆ.தி.பகலன்"
Post a Comment