"கருமமே கண்ணாயினார் "
"ஒரு செயலை நாம் செய்ய நினைத்தால் அந்த செயலில்
மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். வேறு எதிலும் நம் கவனத்தைச் சிதற
விடக்கூடாது. அப்போதுதான் வெற்றி காண முடியும் " என்னும் அழகான கருத்தை
விளக்கும் பாடல் இது.
"மெய்வருத்தம் பாரார் , பசிநோக்கார் கண்துஞ்சார் ,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணா யினார். " ( நீதிநெறி விளக்கம் - 52)
தாம் தொடங்கிய
செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் , தம் உடலில் உண்டாகும் நோயைப்
பொருட்படுத்தமாட்டார். பசியைப் பார்க்க
மாட்டார். தூங்க மாட்டார். யார் தீங்கு செய்தாலும், அதைப் பொருட்படுத்த
மாட்டார். காலத்தின் அருமையைப் பற்றியும்
கவலைப்பட மாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்க மாட்டார்.
தாங்கள் செய்யும் செயலிலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதில் கவனமாக
இருப்பார்.
வெற்றி ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுபவர்கள்,
மற்றவர்களின் வெற்றுப்பேச்சுக்கும், மற்றவர்கள் தரும் இடையூறுக்கும் மனம் கலங்காது
இருப்பர். தாம் நினைத்ததை செய்து முடிக்கும்வரை போராடுவர்.
"கருமமே கண்ணாயினார்" என்ற சொற்றொடர்க்கு
"'செய்யும் செயலையே கண்ணாக நினைப்பவர்கள் ' என்பது பொருளாகும்.
"கவலைகளை விலக்கு!
கைக்கெட்டும்
உன் இலக்கு!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 94. கருமமே கண்ணாயினார் ஆ.தி.பகலன் "
Post a Comment